தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்கசிவு காரணமாக மூன்று வீடுகள் எரிந்து நாசம்: ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்! - திருவாரூர்

ஆப்ரகுடி அருகே மின்கசிவு காரணமாக மூன்று வீடுகள் எரிந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில், சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

Three houses burnt down due to electrocution near Thiruthuraipoondi, three houses burnt near Thiruvarur, திருத்துறைப்பூண்டி அருகே மின்கசிவு காரணமாக மூன்று வீடுகளில் தீ விபத்து, Thiruthuraipoondi, thiruvarur latest, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், திருவாரூர் மாவட்டச்செய்திகள்
three-houses-burnt-down-due-to-electrocution-near-thiruthuraipoondi

By

Published : Mar 2, 2021, 2:19 AM IST

திருவாரூர்:திருத்துறைப்பூண்டி கச்சனம் ஊராட்சியை அடுத்துள்ள ஆப்ரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா. இவரது வீட்டில் நேற்று திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அருகில் வாஷிங்மெசின், பெட் உள்ளிட்டவை தீப்பிடித்து எரிய தொடங்கின. அத்துடன், தீ மளமளவென அருகில் இருந்த மூன்று வீடுகளிலும் பரவியது.

தீயை அணைக்க அக்கம் பக்கத்தினர் முயன்ற போதும், தீ மளமளவென பரவி, கொழுந்துவிட்டெரிந்து, அந்த பகுதியையே சாம்பல் மேடாக்கியது.

இதனிடையே, இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஏறத்தாழ, அரை மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மூன்று வீடுகளும் முற்றிலுமாக எரிந்ததால் சுமார் 10 லட்சம் ரூபாய் வரையில் சேதம் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'நிச்சயமாக பெட்ரோல் விலை குறையும்!'

ABOUT THE AUTHOR

...view details