திருவாரூர்: இந்துசமய சைவ பீடங்களில் தலைமையிடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வரும் நிலையில், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஆழித் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு அபிஷேகங்கள் விசேஷ பூஜைகள் மற்றும் சுவாமி வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என போற்றப்படும் 350 டன் எடை 94 அடி உயரம் கொண்ட தேரானது மூங்கில் கம்புகள், வண்ண காகிதங்கள் அழகிய மலர்கள், கொண்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில், காலை 8.10 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆருரா தியாகேசா என சத்தம் எழுப்பிக் கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் இந்த தேர் முக்கிய நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து இறுதியாக ஏழு மணியளவில் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறுத்தப்படும். சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் தீயணைப்புத் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரைகள் - மேயர் பிரியாவின் புதிய அறிவிப்பு