தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் லலிதாம்பிகை அம்மன் கோயில் தேரோட்ட விழா! - car festival news

திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற லலிதாம்பிகை அம்மன்  கோயில் தேரோட்ட விழா நடைபெற்றது.

திருவாரூர் லலிதாம்பிகை அம்மன் கோயில் தேரோட்ட விழா!
திருவாரூர் லலிதாம்பிகை அம்மன் கோயில் தேரோட்ட விழா!

By

Published : Feb 18, 2021, 6:04 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருமீச்சூரில் வரலாற்று சிறப்புமிக்க சக்தி பீடங்களில் முதன்மையானதாக கருதப்படும் லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய லலிதாம்பிகை சமேத மேகநாதசுவாமி ஆலயத்தில், கடந்த 10ஆம் தேதி ரதசப்தமி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் த்வஜாரோஹணம் சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கி பஞ்சமூர்த்திகள், வீதியுலா மற்றும் புஷ்ப பல்லக்கு புறப்பாடு உள்ளிட்டைவைகள் சிறப்பாக நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து 9ஆவது நாளான இன்று (பிப். 18) லலிதாம்பிகை அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வைவேலங்குறிச்சி ஆதினமான ஶ்ரீசத்தியஞான மகாதேவ சுவாமி கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.

திருவாரூர் லலிதாம்பிகை அம்மன் கோயில் தேரோட்ட விழா!

தேரோட்டமானது நான்கு முக்கிய வீதிகளின் வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இறுதியாக கோவிலின் வாயிலில் தேரோட்டம் முடிவடைந்தது.

இதையும் படிங்க...'கேசிஆர் பிறந்தநாள் பரிசாக வழக்கறிஞர் தம்பதி கொலை!'

ABOUT THE AUTHOR

...view details