இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு(எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை(என்எம்சி) மத்திய அரசு கொண்டுவருகிறது. இதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அன்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
கண்களில் கருப்பு துணி கட்டி மருத்துவ மாணவர்கள் போராட்டம்!
திருவாரூர்: தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டம்
அந்தவகையில், இன்று திருவாரூர் அரசு மருத்துவமனையில் படிக்கும் மாணவ, மாணவிகள் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெக்ஸ்ட் தேர்வின் திணிப்பை கண்டித்தும் 300க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.