திருவாரூர் மாவட்டம், முழுவதும் ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் சமூக இடைவெளியுடன் 500 மையங்களில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக திருத்துறைப்பூண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த மார்ச் முதல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வரை செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும்; பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவை ஆறு மாதங்களுக்கு கடன் தவணையை வசூலிக்ககூடாது எனவும்;
கடன் தவணையையும் வட்டித்தொகையையும் கேட்டு மிரட்டுபவர்களை தடுத்து நிறுத்தி, இந்த ஆண்டு முழுவதும் கடன் தவணையை திருப்பிச் செலுத்த விலக்கு அளிப்பதோடு, வட்டித் தொகை முழுவதையும் ரத்து செய்ய அறிவுறுத்த வேண்டும் என போராட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் போராட்டம் மேலும் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்குவதோடு, உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும்; கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும்; வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையும் படிங்க:கருவூலத்துறைக்கு எதிராகப் போராடப் போவதாக ஆசிரியர்கள் சார்பில் அறிவிப்பு!