திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு மூத்த குடிமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கரோனாவால் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போதும் நீடிக்கிறது.
இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களிலும்கூட கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகின்றனர்.
முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடிதான் கரோனா தொற்று ஒன்றுகூட இல்லாத நிலையை முதலமைச்சர் தலைமையில் செம்மையாகச் செய்வோம். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் கட்சி தெளிவாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:சாதி மனிதனை சாக்கடையாக்கும்: ஆந்திராவில் ஆணவக் கொலை...