திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள விசலூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் திவ்யா (23) கடந்த ஓராண்டாக வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜூலை 1) அதிகாலை திவ்யாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கடும் வலியால் அவதிப்பட்ட அவர், வலி தாங்க முடியாமல் திடீரென வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் தகவலறிந்து சம்பவம் இடத்திற்குச் சென்ற நன்னிலம் காவல் துறையினர், திவ்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வயிற்று வலியால் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சிறுமிக்குப் பாலியல் வன்புணர்வு: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது