வெறிச்சோடி காணப்படும் டாஸ்மாக்- என்ன நடந்தது திருவாரூரில்? - TASMAC thiruvarur
திருவாரூர: மாவட்டம் முழுவதும் 101- டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் திருவாரூர் நகர் பகுதிகளில் குடிமகன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்றோடு 53 நாள்கள் கடந்துவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரடங்கு தளர்வு மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி தமிழகத்திலும் பல்வேறு தொழில்கள் வணிக நிறுவனங்களுக்கு திறக்க தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் மீண்டும் டாஸ்மாக் மதுபான கடை கள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் வாரத்தின் ஏழு நாள்களுக்கும் ஏழு வண்ணங்களில் டோக்கன் கொடுக்கப்பட்டு அதன்படி மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதன்படி மது பிரியர்கள் டோக்கன் வாங்கி செல்கின்றனர்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. கடைகளில் சொற்ப அளவிலேயே குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்க குடிமகன்களுக்கு மதுபான கடை ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு டாஸ்மாக் மதுபான கடைக்கும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 5 பேர் கொண்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முகக் கவசம் அணியாமல் வரும் மது பிரியர்களுக்கு மதுபானம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விதிமுறைகள் மீறல்: சேலத்தில் கடைகளுக்குச் சீல்வைப்பு!