திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள கூத்தாநல்லூர் பகுதியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தவர்கள், அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையில் கூத்தாநல்லூர் வட்டாட்சியருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியில் பணியாற்றிய 6 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.