திருப்பூர் மாவட்டத்தில் செரங்காடு பிள்ளையார் கோயில் வீதியில் தனது தாயுடன் வசித்து வந்தவர் சிவக்குமார். கடந்த சில வருடங்களாகவே மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வரும் இவர், தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராகப் பணிபுரிந்து வருகிறார்.
பூட்டிய வீட்டினுள் இறந்து கிடந்தவரால் பரபரப்பு! - lock
திருப்பூர்: பூட்டிய வீட்டினுள் ரத்தவெள்ளத்தில் நபர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் சிவக்குமாரின் தாயார் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றதால் சிவக்குமார் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இன்று காலை ஊரிலிருந்து திரும்பி வந்த சிவக்குமாரின் தாய், வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது சிவக்குமார் கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.