தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - bharathidasan university protest

திருவாரூர்: கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 3, 2020, 10:29 AM IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தண்டலச்சேரி பகுதியில் செயல்பட்டு வருகிறது, பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி. இதில், 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த பிரச்னை கடந்த ஒரு வருட காலமாகவே நிலவி வருகிறது. இது தொடர்பாக, கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை எனவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கல்லூரி கட்டிடங்களை சீரமைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, கல்லூரி கட்டிடங்களை விரைவில் சீரமைக்க வேண்டும், கல்லூரியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நர்ஸ் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்துவிட்டதா?

ABOUT THE AUTHOR

...view details