திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலச்சேரி பகுதியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி அமைந்துள்ளது.
இக்கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயலில் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் ஜன்னல் கண்ணாடிகள் உள்பட கல்லூரியின் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது
மாணவர்கள் ஆர்பாட்டத்தால் கல்லூரிக்கு விடுமுறை
ஒருவருடம் நிறைவடைந்த நிலையில் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்காத கல்லூரி நிரவாகத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்