திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இன்று 67ஆவது பிறந்தநாள். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும், திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிவருகின்றனர். அதன்படி, திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதி திமுக ஒன்றியத் தலைவர் தேவா தலைமையில் கட்சி தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடினர்.
ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு தேநீர், இலவச உணவு
திருவாரூர்: புலிவலத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுகவினர் ஒரு ரூபாய்க்கு டீ, இலவச உணவு வழங்கிவருகின்றனர்.
stalin-birthday
அதுமட்டுமல்லாமல், புலிவலம் பகுதியில் டீக்கடை ஒன்றில் ஒரு ரூபாய்க்கு டீயும், உணவகம் ஒன்றில் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்வில், புலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, துணைத் தலைவர் கார்த்தி உள்ளிட்ட திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:‘பிறந்தநாளன்று நேரில் வர வேண்டாம்’ - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்