திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாநில அரசாங்கங்கள் கல்வி கொள்கையை சீர்குலைக்கும் எண்ணத்தில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை திணிக்கும் நோக்கத்துடன் நீட் தேர்வு என்று மாணவர்களின் உயிர்களை மத்திய அரசு மறித்து வருகிறது.
நீட் தேர்வு எதிர்ப்பு; இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் - Students federation of India
திருவாரூர்: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
SFI protest against NEET exam in thiruvarur district
அதன் விளைவாக தமிழ்நாட்டில் மாணவர்கள் தினம்தோறும் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் இறந்து கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டப்பேரவை கூடும் நேரத்தில் நீட் தேர்வுக்காக ஏற்கனவே போடப்பட்ட தீர்மானத்தை போல் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிடட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.