தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் கிராம சேவை மையக் கட்டடத்தை திறக்க கோரிக்கை - திருவாரூர் அண்மைச் செய்திகள்

நன்னிலம் அருகே பல வருடங்களாக பூட்டிக் கிடக்கும் கிராம சேவை மையக் கட்டடத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூரில் கிராம சேவை மையக் கட்டடத்தை திறக்க கோரிக்கை
திருவாரூரில் கிராம சேவை மையக் கட்டடத்தை திறக்க கோரிக்கை

By

Published : Jul 15, 2021, 7:29 PM IST

திருவாரூர்: நன்னிலம் அருகே முகந்தனூர் கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர், கிராம மக்கள் பயன்பாட்டிற்காக கிராம சேவை மையக் கட்டடம் கட்டப்பட்டது.

ஆனால், இந்தக் கட்டடம் பல ஆண்டுகளாக பயனற்று திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

இந்நிலையில் இதனை சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாற்றி வருகின்றனர். கட்டடம் முழுவதும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் தருவாயில் காணப்படுகிறது.

கட்டடத்தைத் திறக்க கோரிக்கை

மேலும் இதில் கிராம நிர்வாக அலுவலகம், நியாய விலைக்கடை ஆகியவை செயல்பாட்டிற்கு வரும் என அரசு அலுவலர்கள் தெரிவித்தது காற்றில் பறந்து விட்டதாக கிராம மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

விரைவில் கிராம சேவை மையக் கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:இறந்து எலும்புக்கூடான நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் யானை!

ABOUT THE AUTHOR

...view details