அந்த மனுவில்
"கரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த நேரத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவ துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் ஊழியர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்.
வெறிநாய்களை பிடிக்க வேண்டி கோரிக்கை இந்த நோய்த் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையையேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து கண்காணித்து மாவட்டத்தை பாதுகாத்து வருகிறார் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது தற்போது கோடை காலம் என்பதால் பல நாய்கள் வெறி பிடித்து பலரையும் கடித்து வருகின்றன. குறிப்பாக திருத்துறைப்பூண்டி பகுதியில் வெறி நாய் கடிக்கு ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
மேலும் இதேபோன்று அனைத்து ஊர்களிலும் இந்த நிலை நீடிக்கிறது. கரோனா வைரஸை விட வெறி பிடித்த தெரு நாய்களால் ஆபத்தான சூழல் உருவாகிறது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வட்டாட்சியர், நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் தெருக்களில் சுற்றித் திரிகின்ற நாய்களை பிடிக்குமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது". எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்ரோன் மூலம் கண்காணித்த காவல் துறை - சிதறியோடிய இளைஞர்கள்