தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் நடைபெற்ற விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சி - விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சி

திருவாரூர் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற விதவைகள் மறுமண சந்திப்பு நிகழ்ச்சி அப்பகுதியினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரோட்டரி சங்கம்
ரோட்டரி சங்கம்

By

Published : Oct 17, 2021, 7:19 PM IST

திருவாரூர்: வேலுடையார் தனியார் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் விதவைகள் மறுமண நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்வேறு காரணங்களால் கணவரை இழந்த கைம்பெண்கள், சூழ்நிலை காரணமாக கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்ற பெண்களின் வாழ்வில் மீண்டும் புதிய வாழ்வை தொடங்கச் செய்யும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வில், தங்களுடைய கணவரையோ அல்லது மனைவியையோ இழந்த பெண்கள், ஆண்கள் இருவரையும் மேடைக்கு அழைத்து சங்கத்தினர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு நிகரான இணையைத் தேர்வு செய்து கொண்டு பயனடைந்தனர்.

இதையும் படிங்க:அதிமுக பொன் விழா..! கொடியேற்றி கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details