மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி-ஹரியானா எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, போராட்டகாரர்கள் மீது டெல்லி காவல் துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருவாரூர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டம்
திருவாரூர்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய இளைஞர் பெரும் மன்றத்தினர் இன்று (நவம்பர் 30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய இளைஞர் பெரும் மன்றத்தினர்
இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் , காவல் துறையினரின் அடக்குமுறையை கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:'கருப்பு சட்டத்தை மோடி அரசு திரும்ப பெறவேண்டும்' : ராகுல் காந்தி
Last Updated : Nov 30, 2020, 2:46 PM IST