தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணமான ஏழே மாதத்தில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை! - seven months of marriage

திருமணமான ஏழே மாதத்தில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான ஏழே மாதத்தில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை!
திருமணமான ஏழே மாதத்தில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை!

By

Published : May 13, 2022, 10:49 AM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பண்டாரவாடை திருமாளம் நோக்கர் தெருவைச் சேர்ந்தவர் கிருத்திகா (29). இவர் பேரளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரது கணவரான கோபிநாத் திருமணத்திற்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது வீட்டில் உள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கிருத்திகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலையால் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:காதலன் கொலை - காதலி தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details