தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பி.ஆர்.பாண்டியன் ஆதரவு

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்

By

Published : May 17, 2019, 7:48 AM IST


அனைத்து விவசாயிகள் சங்கங்களின் அவசரக் கூட்டம் விவசாய சங்ககளின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ராசி மணலில் தமிழ்நாடு அரசு அணை கட்டுவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். காவிரி ஆணையம் இதுவரை கூட்டப்படவில்லை, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இதுவரை ஒரு முறை மட்டுமே கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இனி மாதம் தோறும் பெங்களூரில் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும் குறுவை சாகுபடி செய்ய ஜீன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மத்தியில் பாரதிய ஜனதா விலகினால் மட்டுமே ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறுத்த முடியும். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லாது எந்த கட்சி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் அறிவித்தாலும் அதில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்போம்" என்றார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பி.ஆர்.பாண்டியன் ஆதரவு
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் அவசரக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details