தென்பெண்ணையின் கிளை நதியான மார்கண்டேயன் நதியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு மேகேதாட்டு அணைக்கான எச்சரிக்கை - பி.ஆர். பாண்டியன் - supreme court judgement about thenpennai river issue
திருவாரூர்: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட தடை இல்லை என்பது மேகேதாட்டு அணைக்கான எச்சரிக்கையாக உள்ளது என தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.
இந்நிலையில் தீர்ப்பு குறித்து திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில், “கர்நாடக அரசு தமிழ்நாடு அரசுக்கு வரக்கூடிய தண்ணீரை தடுத்துநிறுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறது. காவிரியாக இருந்தாலும் சரி தென்பெண்ணையாக இருந்தாலும் சரி அதில் கழிவுநீரை கலக்கச்செய்து தமிழ்நாடு மக்களை அச்சுறுத்தும் நிலை நீடித்துவருகிறது.
தற்போது மார்கண்டேயன் நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு தடை இல்லை என்ற தீர்ப்பு தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பானது மேகேதாட்டு அணைக்கான எச்சரிக்கையாக உள்ளது. தமிழ்நாடு அரசானது காவிரியையும் தென்பெண்ணையையும் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு விவசாயிகளை ஒன்று திரட்டி செயல்பட வேண்டும். மேலும் இந்தத் தீர்ப்பு குறித்த நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
TAGGED:
pr pandian