திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், “மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு விரோதமாக விவசாயிகளை ஒடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது. அதில், குறிப்பாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கும் அது குறித்து ஆய்வுசெய்வதற்கும் இனி விவசாயிகளிடம் கருத்தை கேட்க வேண்டியதில்லை.
பொதுமக்கள் கருத்தை கேட்க வேண்டியதில்லை, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிபெற தேவையில்லை என்கிற ஒரு அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிரப்பித்திருப்பது அரசியல் சட்டத்திற்கு முரணானது.
இந்தச் சட்டம் கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்ககூடிய வகையிலும் மக்கள் கருத்து சுதந்திரத்தை பறிக்ககூடிய வகையிலும் உள்ளது. மேலும், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சட்டத்திற்கு எதிராக விரைந்து வழக்கு தொடங்கவிருக்கிறது” எனத் தெரிவித்தார்.