தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளம் நிறைந்து வீடுகளுக்குள் புகுந்த நீர் - கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்! - பொதுமக்கள் அவதி

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்துக்குப் பின்புறம் உள்ள குளம் நிறைந்து, குடியிருப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொது மக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது.

pond-water-entered-into-the-people-house
pond-water-entered-into-the-people-house

By

Published : Nov 29, 2019, 11:39 AM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்துக்கு பின்புறம் நந்தவனக்குளம் உள்ளது. இந்தக் குளத்தை நகராட்சி நிர்வாகம், முறையாக தூர்வாரததால், தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குளம் நிரம்பி வழிகிறது.

இதன் காரணமாக குளத்தின் தண்ணீர் சாலைகளிலும், வீடுகளிலும் உள்ளே புகுந்து துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் வீடுகளில் புகுந்த தண்ணீர் காரணமாக பெண்கள், குழந்தைகள் மிகவும் அவதியடைவதோடு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

குளம் நிறைந்து வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள குளத்தைக்கூட கண்டுகொள்ளமால், அலட்சியம் காட்டி வருவது பொது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாலையில் தேங்கும் மழைநீர்... அச்சத்தில் பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details