திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில், விதிகளை மீறி செயல்பட்டதாக 4 ஆயிரத்து 481வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, 4 ஆயிரத்து 534 பேர் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, 4 ஆயிரத்து 168 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, கரோனா அச்சுறுத்தல் காரணமாக, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 18 பேர் வெளியில் நடமாடுவது குறித்து வந்த புகாரையடுத்து, 18 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ஊரடங்கை மீறியவர்களை எச்சரித்த காவல்துறை காவல்துறை, சுகாதாரத்துறையின் மூலம் எவ்வளவு பரப்புரை செய்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிகின்றனர். தற்போது, இவர்கள் மீது பதியப்படும் வழக்குகள் அனைத்தும், அரசு வேலை வாங்குவதிலும், கடவுச்சீட்டு எடுப்பதிலும் பல சிக்கல்கள் வரும் என்பதை எடுத்துக்கூறிய காவல்துறையினர், உயிர் முக்கியமா? காய்கறிகள் முக்கியமா? என எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ!