திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பாமக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
அதிமுக கூட்டணியில் இரண்டாவது மிகப் பெரிய கட்சி பாமக -ஜி.கே. மணி - pmk leader gk mani attent pmk meeting
திரூவாரூர்: அதிமுக கூட்டணியில் பாமக இரண்டாவது மிகப் பெரிய கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எங்களுக்கு உரிய இடங்களை கேட்டுப் பெறுவோம் என்று அக்கட்சியின் தலைவர் ஜிகே. மணி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அதிமுக கூட்டணியில் பாமக இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு எங்களுக்கு உரிய இடங்களை கேட்டுப் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் எந்தவித காரணமும் இல்லை. இது எதிர் கட்சியினர் அரசியல் உள்நோக்கத்தோடு சொல்லப்படுகிற ஒரு செய்தியாகத்தான் பார்க்க முடியும். மேலும் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பில்லை" என்றார்.