தமிழ்நாட்டில் சாலை விரிவாக்கம் பணிகளுக்காக பல லட்சம் மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பருவ மழை பொய்த்து போனது.
மன்னார்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா! - plant sapling in thiruvarur
திருவாரூர்: மன்னார்குடியில் தனியார் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மேலும் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் மரங்கள் வளர்க்க பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு அரசு மரங்களை வளர்க்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அந்தந்த மாவட்ட ஊராட்சிகளில் இருக்கும் ஆறு, குளம், ஏரி, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலை கரையோரங்களில் பல ஆயிரம் மதிப்பில் குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சிகளில் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமைக்கரங்கள் மற்றும் ராஜ விநாயகர் கைங்கர்சபாவினர் இணைந்து 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைக்க முடிவு செய்துள்ளனர். இதன் முக்கிய நோக்கம் தமிழ்நாடு முழுவதும் குறுங்காடுகளை அமைத்து இயற்கையை பாதுகாப்பதே என கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.