தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைக்கோல் கட்டும் பணியில் விவசாயிகள் தீவிரம்

திருவாரூர்: அறுவடை பணிகள் நடந்து முடிந்த நிலையில் வைக்கோல் கட்டும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

farmer procees sincerely
farmer procees sincerely

By

Published : Feb 14, 2020, 1:09 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர். இந்நிலையில் அறுவடை பணிகள் பல பகுதிகளில் தொடங்கி முடிவு பெற்ற நிலையில் விவசாயிகள் வைக்கோல் கட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இதுகுறித்து கூறும் விவசாயிகள், வைக்கோல் கட்டுகள் ரூபாய் 10 முதல் 50வரை விற்பனை ஆவதாகவும், இடைத்தரகர்கள் நேரடியாக தங்கள் வயல்களுக்கு வந்து வைக்கோல் கட்டுகள் வாங்கி செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வைக்கோல் கட்டுகள் 50 முதல் 100 ரூபாய்வரை விலை போனால் எங்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தங்களுக்கு சிரமமில்லாமல் வயல்களும் சுத்தமாக அடுத்த நடவு பணி செய்வதற்கு ஏதுவாக உள்ளதாக கூறுகின்றனர்.

வைக்கோல் கட்டும் பணி

மேலும், இந்த வைக்கோல் கட்டுகள் இடைத்தரகர்கள் மூலம் வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கு சென்று மாடுகளுக்கும், காளான் போடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2020: வேளாண் துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details