திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள பேரளம் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், அறுவடை பணிகள் முடிந்து நெல் மூட்டைகளை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் 10 நாட்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர்.
இது குறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது, "பல்வேறு இடற்பாடுகளை தாண்டி குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். அறுவடை பணிகள் முடிந்து நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக கொண்டுவந்துள்ளோம். 10 நாட்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கின்றோம்.