புரெவி புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழையும் பெய்துவருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று (டிச. 03) காலையில் தொடங்கிய மழையானது 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்துவருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
குறிப்பாக நன்னிலம் அருகேவுள்ள திருக்கொட்டாரம், வேலங்குடி, கமுகக்குடி, பழையாறு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய பெய்துவரும் கனமழையால் அந்தப் பகுதிகளிலுள்ள குளங்கள், வாய்க்கால்கள் நீர்நிலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், வெள்ளம் வருவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.