தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெங்காயம் விலையேற்றம் என்பது தற்காலிகமானது - அமைச்சர் காமராஜ் - Food Minister Kamaraj

திருவாரூர்: வெங்காய விலையேற்றம் என்பது நிரந்தரமானதல்ல தற்காலிகமானது என தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

வெங்காயம்
வெங்காயம்

By

Published : Nov 6, 2020, 4:33 PM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் உழைக்கும் மகளிருக்கான மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனம் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறிய அவர், வெங்காய விலையேற்றம் என்பது நிரந்தரமானதல்ல அறுவடை செய்யும் நேரத்தில் மழை தொடங்கியதால் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெங்காய விலை ஏற்றம் கூடியுள்ளது. இது தற்காலிகமானதுதான். வெங்காய விலை ஏற்றம் கூடும்போது வெளியிலிருந்து இறக்குமதி செய்து கிலோ 45 ரூபாய்க்கு எல்லா கடைகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதலாக கடைகளில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்திய ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதனடிப்படையில் விஜயின் தந்தை தொடங்கியுள்ளார். அதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தந்தை-மகன் பிரச்னை இதில் நான் கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை” என்றார்.

இதையும் படிங்க:விண்ணைத்தொடும் வெங்காய விலை உயர்வு : அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details