திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் பகுதியைச் சேர்ந்த நெல் ஜெயராமனால் நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக, ஆண்டுதோறும் 'பாரம்பரிய தேசிய நெல் திருவிழா' நடத்தப்பட்டது. 2018ஆம் ஆண்டு இவரின் மறைவைத் தொடர்ந்து கிரியேட் அமைப்பு தொடர்ந்து, தேசிய நெல் திருவிழாவை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான 14ஆவது தேசிய நெல் திருவிழாவானது, வருகின்ற மே மாதம் 23ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதி என இரு தினங்கள் நடைபெறவுள்ளதாக கிரியேட் அமைப்பின் தலைவர் துரை சிங்கம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரியேட் அமைப்பின் தலைவர் துரை சிங்கம், 'விழாவின் சிறப்பு அம்சமாக நெல் ஜெயராமன், நெல் விதை ஆராய்ச்சி மையத்தில் பயிர் செய்யப்பட்ட தரமான இனக்கலப்பு இல்லாத பாரம்பரிய நெல் விதைகளை, சுமார் 5ஆயிரம் விவசாயிகளுக்கு 2 கிலோ வழங்க உள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
கிரியேட் அமைப்பின் தலைவர் துரை சிங்கம் உரை பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருக்கும் இவ்விழாவில், இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளைக் கண்டெடுத்து, அவர்களின் பெயருடன் கூடிய நெல் அடைமொழி விருது வழங்கப்படவுள்ளதாகவும் பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி, பாரம்பரிய உணவுத் திருவிழா ஆகியவை நடைபெறவுள்ளதாகவும் துரை சிங்கம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:10 லட்சம் சம்பளத்தை உதறி இயற்கை விவசாயத்தில் தூள்கிளப்பும் பொறியாளர்