திருவாரூர்: நன்னிலம் அருகேயுள்ள கூத்தனூரில் மகாசரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் விஜயதசமி விழா ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கு என தனிக் கோயில் அமைந்துள்ளது கூத்தனூரில்தான்.
ஒட்டக் கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கூத்தனூர் என பெயர் பெற்றது. இந்நிலையில், இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.
சரஸ்வதி கோயிலுக்கு வருந்தவர்கள் நோட்டு புத்தகம், பேனா, சிலேடு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். சரஸ்வதி அம்மனை தரிசித்து ஆசி பெற பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தனர்.
சரஸ்வதி கோயிலில் குவிந்த பக்தர்கள்