திருவாரூர்: நன்னிலம் அருகே வேலங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட கமுதக்குடி கிராமத்தை சேர்ந்த லெனின் என்பவரது மகன் மணிகண்டன் வயது 25. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதம மந்திரி வீடு திட்டத்தின் கீழ் வீட்டின் எதிர்ப்புறம் உள்ள இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் மேற்பார்வையாளர் மகேஸ்வரன் என்பவர் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கடன பெற்று அந்த பணத்தை கொடுத்துள்ளார்.
அதேபோல, கீழ்த்தளம் கட்டியவுடன் இரண்டாவது தவணை தொகையை விடுவிக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக மகேஸ்வரன் கேட்டதால், அக்கம்பக்கத்தினர் மற்றும் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த பணம் ரூ 15 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்துள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:கணவன் வீட்டில் கழிவறை இல்லாததால் மனைவி தற்கொலை…போலீஸ் விசாரணை