திருவாரூர்:நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டர் பரப்பளவில், விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தண்ணீரின்றி காயும் நெற் பயிர்கள்:
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, “ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தோம். நெற் பயிர்கள் அனைத்தும் வளரத் தொடங்கியுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அலுவர்கள் தண்ணீரை முறை வைத்து திறந்து விடுவதால் நெற் பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது.
வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் போர்வெல் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். சிறு, குறு விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, தண்ணீர் திறப்பு நாட்களை உயர்த்த பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து உயர்வு