திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட தேவூர், காளியாகுடி, கூத்தனூர், குமாரமங்கலம், கீரனூர், பண்ணைநல்லூர், உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் விளைநிலங்கள் வீரசோழன் ஆற்றிலிருந்து பிரியும். இந்த நிலங்கள் கோவிந்தன்கால் வடிகால் வாய்க்கால் மூலமாக பாசன வசதி பெற்றுவருகின்றன.
தற்போதுவரை இந்த வடிகால் வாய்க்காலாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருகிறது. மழைக்காலங்களில் பெய்யக்கூடிய மழை நீர், வீரசோழன் ஆற்றிலிருந்து உபரிநீராக திறந்துவிடப்படும். குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கோவிந்தன்கால் வாய்க்காலில் தண்ணீர் செல்லும். இந்த உபரிநீரை பயன்படுத்தி தான் விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர்.
மழை நீரை நம்பி சாகுபடி செய்வதால், இந்த வடிகால் வாய்க்காலை பாசன வாய்க்காலாக மாற்றிக் கொடுக்க வேண்டுமென பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடிவருகின்றனர்.