தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலம் வேண்டி 50 ஆண்டுகால போராட்டம் - நன்னிலம் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? - நன்னிலம்

ஆற்றின் குறுக்கே பாலம் வேண்டி நன்னிலம் மக்கள் 50 வருட காலமாக போராடி வருகின்றனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாவது தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி தரவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

nannilam
nannilam

By

Published : Jun 18, 2021, 8:28 AM IST

Updated : Jun 18, 2021, 1:16 PM IST

திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள கடகம் கிராமத்தில் ஜம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்குப் பாலம் வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்துப் பேசிய கிராம மக்கள், "எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் குழந்தைகள், வயதானவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் உள்ளனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் கிராமத்திற்குப் பால வசதி இல்லாததால் இயற்கை பேரிடர் காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறோம்.

பாலம் வேண்டி 50 ஆண்டுகால போராட்டம்

பல முறை அலுவலர்கள், அமைச்சர்கள், முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் எங்கள் பகுதி வழியாகச் சென்றபோது, வாகனத்தை வழி மறித்து மனு அளித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்துவிட்டுச் சென்றார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மரப்பாலம் மிக மோசமான நிலையில் பழுதடைந்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

- நன்னிலம் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா

இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து புதிதாக காங்கிரீட் பாலம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated : Jun 18, 2021, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details