திருவாரூர் : குடவாசல் பருத்தியூரைச் சேர்ந்த ரஞ்சித் (18), ராம் (19) இருவரும் இருசக்கர வாகனத்தில் குடவாசல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இருசக்கர வாகனம் மீது லாரி மோதல் : இருவர் பலி - நன்னிலம் வாகன விபத்து
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
நன்னிலம் அருகே வாகன விபத்து: இருவர் பலி
அப்போது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற குடவாசல் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.