தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவர்கள் போல் பேசி வதந்தி - தேடுதல் வேட்டையில் காவல்துறை - மருத்துவர்கள் போல பேசும் வதந்தி நபர்கள்

திருவாரூர்: மருத்துவர்கள் போல் பேசி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவர்கள் போல பேசும் வதந்தி நபர்கள்
மருத்துவர்கள் போல பேசும் வதந்தி நபர்கள்

By

Published : Apr 15, 2020, 10:52 AM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே நாடு முழுவதும் கரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளும், அச்சுறுத்தல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் அருண்குமார் போல் பேசி சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியானது. இது, மாவட்டம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மருத்துவர் அருண்குமார் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் போல் பேசி சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி குணமடைந்து அவரது உறவினர்களிடம் விசாரிப்பது போல் ஆடியோவில் பதிவானது.

இந்த ஆடியோவை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உதவிக்கரம்

ABOUT THE AUTHOR

...view details