தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் அருேக தாயும், மகளும் தூக்கிட்டு தற்கொலை! - Mother and daughter commit suicide

திருவாரூர் புலிவலம் விஷ்ணு தோப்பு பகுதியைச் சேர்ந்த தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாயும் மகளும் தற்கொலை
தாயும் மகளும் தற்கொலை

By

Published : May 22, 2021, 4:22 PM IST

திருவாரூர்:திருவாரூர் அருகே புலிவலம் விஷ்ணு தோப்பைச் சேர்ந்தவர் தமிழரசி (65). இவரது மகள் ஜோதி (40). ஜோதி தனது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தார். இவர், பேக்கரி ஒன்றில் பணிபுரிந்தும் வந்தார்.

இந்நிலையில், நேற்று (மே.21) நீண்ட நேரமாகியும் தமிழரசியின் வீட்டு கதவு திறக்கமால் இருந்ததால் சந்தேமடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது தாயும், மகளும் ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர்.

பின்பு, இச்சம்பவம் குறித்து தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வீடு முழுவதும் ரத்தகரை இருந்ததால் இருவரும் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும், மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல... உதவிக்கு அழையுங்கள்:

அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்- +91 44 2464 0050, +91 44 2464 0060

இதையும் படிங்க:பூட்டியிருந்த கடையை உடைத்து கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details