திருவாரூர் மாவட்டம் கச்சனம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வசதி சங்கம் மூலமாக சுமார் 200 ஹெக்டேர் விளை நிலங்களில் உளுந்து பயிரிட்டு சேதமடைந்ததாக போலி ஆவணங்கள் தாக்கல் செய்து கச்சனம் கிராம நிர்வாக அலுவலர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர், உதவி வேளாண்மை இயக்குனர் ஆகியோர் ஒன்றிணைந்து சுமார் ஐம்பது லட்சத்திற்க்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
50 லட்சம் ரூபாய்க்கு மேலாக மோசடி - ஊழலுக்கு ஏதிராக கோஷங்கள் எழுப்பி விசிக ஆர்ப்பாட்டம் - ஊழல்
திருவாரூர்: 50 லட்சம் ரூபாய்க்கு மேலாக மோசடி செய்த அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலம் முன்பு விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை செயலாளர் ஆராசு. பிரகாஷ் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் என்.டி. இடிமுரசு கண்டன உரை நிகழ்த்தினார், மாநில நில உரிமை மீட்பு செயலாளர் பூமிநாதன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட ஒன்றிய, நகர செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஊழலுழக்கு ஏதிரான கோஷங்களை எழுப்பினர்.