திருப்பத்தூர் ஜெயின் சங்கத்தின் மூலமாக ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் 6 படுக்கைகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், நேற்று காலை பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பேசுகையில், “வேலூர் ஒருகிணைந்த மாவட்டத்தில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. அதிநவீன கருவிகள் மூலம் கரோனா ரத்த மாதிரி பரிசோதனை உடனடியாக அறிந்து கொள்ள நாளை முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொடங்கப்படுகிறது” என்றார்.