திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெங்காயம் விலை தற்காலிக விலை ஏற்றம் தான். வெங்காயம் எடுக்கும் நேரத்தில் அதிக மழை பெய்து வருவதால் அறுவடை செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில் தேவைப்பட்டால் ரேஷன் கடையில் வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.