திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பாமணி கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த பின் அம்மா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணிகளை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி இன்று (ஆகஸ்ட் 29) மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில் நடைபெற்ற வரும் அம்மா பசுமை வீடு கட்டும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தேன். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் கூட்டணி குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருவாரூர் மற்றும் தஞ்சையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் பதில் அளித்துள்ளார்.