திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மகளிர்களுக்கான வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வங்கி கடனுக்கான காசோலைகளை வழங்கினார்.
பின்னர் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், “திருவாரூர் மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 732 மகளிர் சுய உதவி குழுக்கள் இருக்கும் நம்முடைய மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். அதிமுக கூட்டணியில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை.
கூட்டணி குறித்து முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே இப்படி கூறிக்கொண்டு வருகிறார்கள். முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை” என்றார்.
குடவாசலில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மேலும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே திமுக கட்சி உடையும் என மு.க. அழகிரி சொல்லிவருகிறார். நானும் சொல்கிறேன் திமுக கட்சி உடையும். அதிமுக கட்சி எந்தக் காரணத்தினாலும் பிளவுபடுவதற்க்கு வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க...சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் வசூல்:பிப்ரவரி 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு