தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என் உயிர் உள்ளவரை நன்னிலம் தொகுதி மக்களுக்கு உழைப்பேன்: அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: என் உயிர் உள்ளவரை நன்னிலம் தொகுதி மக்களுக்கு உழைப்பேன் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு
அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு

By

Published : Mar 27, 2021, 6:34 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ் திறந்தவெளி வாகனத்தில், பல்வேறு இடங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், "உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்காக செயலாற்றுவேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே கிடையாது.

அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு

அம்மாவைப் போலவே, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுகிறார். என் உயிர் உள்ளவரை நன்னிலம் தொகுதி மக்களுக்கு உழைப்பேன்" என்றார்.

இதையும் படிங்க: தொகுதியில் உள்ள குழந்தைக்கு கூட என் பெயர் தெரியும்! - ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details