திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு 532 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவாரூர் வட்டத்திற்குள்பட்ட ஆதரவற்ற கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோர், திருமண உதவித்தொகை மற்றும் முதிர்கன்னி உள்ளிட்ட 532 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன், வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.