திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் புத்தாற்றின் குறுக்கே சுமார் ரூபாய் 147.02 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராஜகாளியிருப்பூர், மாப்பிள்ளை குப்பம் ஆகியவற்றை இணைக்கும் புதிய பாலங்களை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.
அமைச்சரின் நிகழ்ச்சியால் கரோனா பரவும் அபாயம் - Minister Kamaraj function at nannilam
திருவாரூர்: நன்னிலத்தில் அரசின் விதிமுறைகளை மீறி நடைபெற்ற நிகழ்ச்சியால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் காமராஜ் நிகழ்ச்சி
நூறு பேருக்கு மேல் கூட்டம் கூடினால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது பொதுமக்களிடையே கரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.