தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும்- அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: விவசாயத்திற்கு தேவையான காவேரி தண்ணீர் திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற வேண்டுமென விவசாயிகளுக்கு அமைச்சர் காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் காமராஜ்

By

Published : Sep 7, 2019, 8:08 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள மூன்று ரத்த சுத்தகரிப்பு கருவிகள் கொண்டு ஒரே நேரத்தில் மூன்று நோயாளிகள் என நாள் ஒன்றுக்கு ஒன்பது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மையத்தை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

அமைச்சர் காமராஜ்

இந்நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, மாவட்ட ஆட்சியர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து மாவட்டத்தின் கடைமடை பகுதியான ஜாம்பவனோடை பகுதிக்கு காவிரி தண்ணீர் வந்ததை பார்வையிட்ட பின் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீரானது திருவாரூர் மாவட்ட ஜாம்பவனோடை பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது.சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற வேண்டும்” என்றார்.

ஜாம்பவனோடை பகுதிக்கு காவிரி தண்ணீர் வந்ததை பார்வையிட்ட அமைச்சர் காமராஜ்

ABOUT THE AUTHOR

...view details