திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவமனை காவிரி டெல்டா மாவட்டத்தில் தொடங்கப்பட்ட முதல் மருத்துவமனையாகத் திகழ்கிறது. இங்கு குழந்தை இல்லா தம்பதிகளுக்கு சோதனைக் குழாய் முறையில் குழந்தை பிறக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மன்னார்குடி, தமிழ்நாடு மருத்துவமனையில் சோதனைக் குழாய் மூலம் பிறந்த 500ஆவது குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்று, ஒரே நாளில் பிறந்த நான்கு குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.