திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மார்ச் 27ஆம் தேதி சிங்காரவேல் என்பவருக்கு சொந்தமான வெடி கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வெடி கிடங்கின் உரிமையாளர் சிங்காரவேல் உட்பட 6 பேர் பலியானார்கள்.
வெடி கிடங்கு விபத்து குறித்து நேரில் தகவல் தெரிவிக்கலாம் - தீ விபத்து
திருவாரூர்: மன்னார்குடியில் தனியாருக்கு செந்தமான வெடிகிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் மே 29ஆம் தேதி நேரில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து இந்திய வெடிபொருள் சட்டத்தின்படி விசாரணை அலுவலராக திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொன்னம்மாள் தலைமையில் மே 29ஆம் தேதி மன்னார்குடி வட்டார அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படும். எனவே இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் அன்று காலை நேரிலோ அல்லது எழுத்து மூலமாகவோ மன்னார்குடி வட்ட அலுவலகத்தில் வந்து தகவல் தெரிவிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.